சச்சின் – வார்னே இணைந்து ஆரம்பிக்கவுள்ள புதிய டி20 கிரிக்கெட் தொடர்

sachin and shane warneஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்காக புதிய டி20 கிரிக்கெட் தொடர் ஒன்றை பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் ஷேன் வார்னே ஆகியோர் இணைந்து விரைவில் உருவாக்க இருப்பதாக ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபல ஆஸ்திரேலிய செய்தி நிறுவனமான நியூஸ் கார்ப் என்ற செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது, ”சச்சின் தெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்னே ஆகிய இருவரும் இணைந்து தொடங்கப்படவுள்ள இந்த கிரிக்கெட் தொடருக்கு ‘ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் லீக்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய கிரிக்கெட் தொடரில் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் பிரெட் லீ, ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், மெக்ரத் மற்றும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மைக்கேல் வாகன், ஃபிளின்டாஃப், தென்ஆப்ரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் காலீஸ் மற்றும் பல முன்னணி வீரர்கள் விளையாட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பிரெட் லீயின் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இந்த புதிய தொடரில் விளையாட அவர் “கிரிக்கெட் ஆஸ்திரேலியா” என்ற அமைப்பிடம் அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் ஆல் ஸ்டார் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஒரு போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் சம்பளமாக தரப்படவுள்ளதாகவும், நியூஸ் கார்ப் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply