பிரபல நடிகையுடன் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் திருமணம்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை பிரபல பாலிவுட் நடிகை கீதா பாஸ்ரா இன்று திருமணம் செய்கிறார். இவர்களுடைய திருமணம் ஜலந்தரில் கோலாகலமாக நடந்தது. இந்த திருமண விழாவில் ஹர்பஜனின் நெருங்கிய நண்பர்களான யுவராஜ்சிங், ஆஷிஸ் நெக்ரா கலந்து கொண்டனர். திருமணத்தையொட்டி ஹர்பஜன்சிங், கீதா பாஸ்ரா ஆகியோருக்கு பிரத்யேகமாக ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அர்ச்சனா கோச்சார் தயார் செய்துள்ளார்.
திருமணத்தை தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி டெல்லியில் உள்ள தாஜ் ஒட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் சச்சின், இந்திய அணி வீரர்கள், தென் ஆப்ரிக்க வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக திருமணத்தை ஒட்டி நேற்று சங்கீத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்சியின் போது நடைபெற்ற விருந்தில் ஜலந்தரின் பிரபல இனிப்பு வகைகளான பாதாம் பர்பி, அன்ஜிர் பர்பி, கஜூபர்பி, லட்டு, ஷாகி பாதாம் பின்னி, ஷனா பர்பி, ஷாகி மதுபாக், ஷாகி பட்டிஸா, சூப்பர் சாப்ட் மில்க் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது.