மனிதர்களை வேட்டையாடிய 1 டன் எடையுள்ள முதலை பிடிபட்டது. அதிர்ச்சி புகைப்படங்கள்

[carousel ids=”33712,33711,33710,33709″]

மனிதர்களை வேட்டையாடி கொன்று சாப்பிட்டு வந்த 1 டன் எடையுள்ள பிரமாண்டமான முதலை ஒன்றை உகாண்டா நாட்டின் பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுடன் நான்கு நாட்கள் போராடி பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

 உகாண்டா நாட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய முதலை அங்குள்ள ஏரி ஒன்றில் இருந்துள்ளது. இந்த முதலை ஏரிக்கு வரும் மனிதர்களை மறைந்திருந்து தாக்கி, உணவாக உண்டு வாழ்ந்து வந்தது. இந்த முதலைக்கு பலர் பலியானதால், இந்த முதலையை எப்படியாவது பிடித்தே ஆகவேண்டும் என அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். எனவே உகாண்டா Uganda Wildlife Authority officer அவர்களை தொடர்பு கொண்டு வனவிலங்கு அதிகாரிகளின் உதவியோடு முதலையை வேட்டையாட தொடங்கினர்.

 80 வயதும், சுமார் 1 டன் எடையும் உள்ள அந்த முதலையை நான்கு நாட்கள் காத்திருந்து பொறிவைத்து பிடித்தனர் அந்த கிராம மக்கள். பல கிலோ ஆட்டுக்கறியை வைத்து முதலையை கரைக்கு வரவைத்து, கயிற்றால்முதலையை கட்டி, லாரி ஒன்றின் மூலம் உகாண்டாவில் உள்ள Murchison Falls National Park in Lolim என்ற இடத்தில் அந்த முதலையை சேர்த்தனர். இந்த முதலை பிடிபட்டவுடன் தான் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

Leave a Reply