காஷ்மீர் கல்லெறி சம்பவங்களை சமாளிக்க பெண் கமாண்டர்கள்

காஷ்மீர் கல்லெறி சம்பவங்களை சமாளிக்க பெண் கமாண்டர்கள்

காஷ்மீரில் தீவிரவாதிகள் அவ்வப்போது ராணுவத்தினர் மீது கல்லெறியும் சம்பவங்களை நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதலை எதிர்கொள்ள பெண் கமாண்டர்களும் இணைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பெண் கமாண்டோக்கள் அடங்கிய சிறப்பு படையை சி.ஆர்.பி.எப் உருவாக்கியுள்ளது.

பெண் கமாண்டர்கள் இரவு நேரப் பாதுகாப்பு, ஆயுதங்களை நொடிப் பொழுதில் பழுது பார்த்தல், கவசமின்றி எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சமீப காலமாக நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களால், பாதுகாப்பு படையினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். கடந்த மே 7ஆம் தேதி, சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற ஆர்.திருமணி(22) என்ற பயணி, நர்பல் பகுதியில் நிகழ்ந்த கல்வீச்சில் சிக்கி உயிரிழந்தார்.

Leave a Reply