கச்சா எண்ணெய்: வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி

கச்சா எண்ணெய்: வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி

கொரோனா வைரஸ் உள்பட பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த 29 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் கச்சா எண்ணெயின் விலை மிக குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

1991ஆம் ஆண்டு வளைகுடாப் போர் நடைபெற்ற போது கச்சா எண்ணெயின் விலை பயங்கரமாக சரிந்தது. அதன் பின்னர் தற்போதுதான் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா கிட்டத்தட்ட முழுக்க முழுக்க கச்சா எண்ணெயை இறக்குமதி நம்பியிருப்பதால் கச்சா எண்ணெயின் விலை குறைவால் இந்தியாவில் இறக்குமதி செலவு பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது

அதே நேரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை பெருமளவு குறையவில்லை என்பது பரிதாபகரமான ஒன்றாக கருதப்படுகிறது

Leave a Reply