பேபி கார்ன் பஜ்ஜி

22-baby-corn-bajji

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் – 1 பாக்கெட்

மைதா – 3-4 டீஸ்பூன்

சோள மாவு – 2 டீஸ்பூன்

கடலை மாவு – 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்

கேசரி பவுடர் – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை: முதலில் பேபி கார்ன்னை நீளமாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மைதா, சோள மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், கேசரி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள பேபி கார்ன்னை சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பேபி கார்ன்னை சேர்த்து பொரித்து எடுத்தால், பேபி கார்ன் பஜ்ஜி ரெடி!!!

Leave a Reply