இஸ்ரேல் நாட்டின் பூ’ ஒன்றுக்கு பிரதமர் மோடியின் பெயர்
பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று இஸ்ரேல் நாட்டிற்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் செல்வது இதுவே முதல் முறை ஆகும். இஸ்ரேலில் சிறப்பான வரவேற்பு பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட நிலையில் இஸ்ரேலில் கிரைசாந்துமன் வகை மலருக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் மோடி, ஜெருசிலேமின் டேன்சிகர் பூ பண்ணைக்கு சென்றார். அங்கு மலர்களை அவர் பார்வையிட்டார். மோடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இஸ்ரேலின் கிரைசாந்துமன் வகை பூ ஒன்றுக்கு மோடி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதை பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பின்னர் இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவும் இஸ்ரேலும் பல்வேறு வகைகளில் பொதுவான பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும், இருநாடுகளும் ஒன்றிணைந்து இருநாட்டுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால்களை சந்திக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.