சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி:
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. வாட்சன் 106 ரன்களும், சுரேஷ் ரெய்னா 46 ரன்களும் குவித்தனர்.
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது