சிடிஎன் – ஃபெதர் கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கிய மகளிர் தின விழா. ஒரு கண்ணோட்டம்

நமது  சென்னை டுடே நியூஸ் ஊடகமும் ஃபெதர் கிரியேஷன்ஸ்  என்ற அமைப்பும் இணைந்து மகளிர் தின விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடியது. இந்த நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள சிடிஎன் அலுவலகத்தில் நடைபெற்றது.,

பிரபல திருமண இணையதளம் கல்யாண சேவா ஏற்பாடு செய்த அரங்கில் இந்த விழா கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் கலைஞர் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான நெஞ்சு பொறுக்குவதில்லை நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் திரு.ஜான் தன்ராஜ் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். மேலும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராஜலட்சுமி, பிரபல வழக்கறிஞர் பகுத்தறிவு, பேராசிரியை சுந்தரி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

[carousel ids=”57359,57360,57361,57362,57363,57364,57365,57366,57367,57368,57369,57371,57372,57373,57374,57376″]

சென்னையில் ஆண்களே ஆட்டோ ஓட்டும் தொழிலை மிகவும் கஷ்டப்பட்டு செய்து கொண்டிருக்கும் நிலையில் வெற்றிகரமாக ஆட்டோ தொழிலை நடத்தி தனது குடும்பங்களை அதிலிருந்து வரும் வருமானத்தில் இருந்து காப்பாற்றி வரும் ஆறு பெண்களுக்கு இந்த விழாவில் மரியாதை அளிக்கப்பட்டது.

வழக்கறிஞர் பெண்களின் பாதுகாப்புக்கு தேவையான சட்ட நடவடிக்கை குறித்தும், பேராசிரியை சுந்தர் பெண்கள் மேல்படிப்பு படிக்க வேண்டிய அவசியத்தையும் தங்கள் சிறப்புரையில் கூறினர்.

மேலும் இந்த விழாவில் ஆறு குறும்படங்கள் வெளியிடப்பட்டன. இதில் விங்ஸ் என்ற குறும்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு படக்குழுவினர்களுக்கு சிடிஎன் பொறுப்பாளர் சிவலிங்கம் பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் ஃபெதர் கிரியேஷன்ஸ் உறுப்பினர்களான ராஜூ ஜோசப் மற்றும் சம்பத் ஷ்யாம் ஆகியோர் விழாவுக்கு வருகை தந்தவர்களுக்கு நன்றி கூறினர்.

   

   

Leave a Reply