மாணவர்கள் போராட்டம் எதிரொலி. கடலூர் திரையரங்கில் இளநீர் விற்பனை
சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கடந்த வாரம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுச்சி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது மட்டுமின்றி இந்த போராட்டத்தால் பல போனஸ் நன்மைகளும் பொதுமக்களுக்கும் நாட்டுக்கும் கிடைத்துள்ளது. அவற்றில் ஒன்று வெளிநாட்டு பானங்களான பெப்சி கோக் ஆகியவற்றை தவிர்ப்பது என்ற முடிவு
உடலுக்கு தீங்கை விளைவிக்கும் வெளிநாட்டு குளிர்பானங்களை தவிர்த்து நமது கலாச்சார பானமான இளநீர், மோர் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் எழுப்பிய எழுச்சிக்குரல் இன்று பல வணிகர்களை விழிப்புணர்வு அடைய செய்துள்ளது.
ஏற்கனவே மார்ச் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்கம் முடிவெடுத்துள்ள நிலையில் கடலூரில் உள்ள கிருஷ்ணாலயா திரையரங்கில் நேற்று முதல் இளநீர், மோர் ஆகிய பானங்கள் விற்கப்பட்டு வருகின்றனர். பெப்சி கோக் போன்ற பானங்கள் இனிமேல் விற்பனை செய்யப்போவதில்லை என்றும், இதனால் தமிழக விவசாயிகள் பலன் அடைவார்கள் என்றும் இந்த திரையரங்கின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதேபோ தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் வெளிநாட்டு பானங்களை தவிர்த்துவிட்டு இளநீரை விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.