ஒரு பீட்சா ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு ஒரு வருடத்திற்கு இலவச பீட்சா கிடைத்த அதிசயம்
[carousel ids=”72169,72168,72166″]
கலிபோர்னியாவை சேர்ந்த ஒருவர் இரண்டு பீட்சா ஆர்டர் செய்திருந்தார். அவற்றில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு மற்றொன்றை மாலையில் சாப்பிடலாம் என்ற வைத்திருந்தார். மாலையில் அந்த பீட்சா பாக்ஸை பிரித்து பார்த்தபோது அதில் பீட்சாவுக்கு பதிலாக 1300 அமெரிக்க டாலர் பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் பீட்சா ஆர்டர் செய்த கடைக்கு போன் செய்து நடந்ததை கூறினார். பின்னர் பீட்சா கடையில் இருந்து வந்த அலுவலகர்கள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு அவருடைய நேர்மையையும் பாராட்டினர்.
உண்மையில் வங்கியில் செலுத்த வேண்டிய பணம் ஒரு பாக்ஸிலும், அந்த வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பீட்சா பார்சலும் அருகருகே இருந்ததாகவும், அதை டெலிவரி செய்தவர் பீட்சா பார்சலுக்கு பதிலாக பணம் இருந்த பார்சலை மாற்றி கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்த வாடிக்கையாளரின் நேர்மையை பாராட்டி, அவருக்கு ஒரு வருடத்திற்கு தினமும் ஒரு பீட்சா இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவித்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.