ரஷ்யா மீது சைபர் போர். அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை

ரஷ்யா மீது சைபர் போர். அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ரஷ்ய உளவுத் துறை செயல்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார். இதனால் அமெரிக்க, ரஷ்ய உறவில் விரிசல் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியதாவது, “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. ஜனநாயக கட்சியின் முக்கிய இ-மெயில்களை ரஷ்ய உளவுத் துறை திருடியுள்ளது. இந்த இமெயில் விவகாரம்தான் ஹிலாரியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதற்குப் பதிலடியாக ரஷ்யா மீது சைபர் போர் தொடுப்போம். அதை யாராலும் தடுக்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply