சைக்கிள் வாங்குங்கள்: உடம்புக்கும் நல்லது, பர்சுக்கும் நல்லது: நெட்டிசன்கள் கிண்டல்
இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கார், வைத்திருப்பவர்கள் வசதி அதிகம் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒரு பொருட்டே இல்லை
ஆனால் குறைவான சம்பளம் வாங்கி அதற்குள் குடும்பம் நடத்தி வரும் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு இந்த கட்டண உயர்வு இடியாய் உள்ளது. இந்த நிலையில் இனி ஒவ்வொரு வருடமும் கட்டணம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வு குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட தொடங்கிவிட்டனர். அதில் ஒருவர், ஐந்து கிலோ மீட்டருக்குள் பயணம் செய்பவர்கள் சைக்கிள் வாங்குங்கள், சைக்கிள் ஓட்டுவதால் உடம்புக்கும் உடற்பயிற்சியாக இருக்கும், பர்சையும் காப்பாற்றியது போல் இருக்கும் என்று கூறி ஒரு மீம்ஸை போட்டுள்ளார். இந்த மீம்ஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.