நவம்பர் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மையம்: வானிலை எச்சரிக்கை
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இருப்பினும் இந்த புயல் எந்த நகரத்தை நோக்கிச் செல்லும் என்பதை இப்போது கணிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது