எகிப்து நாட்டில் ஒற்றைக்கண்ணுடன் பிறந்த குழந்தை. பெரும் பரபரப்பு
சமீபத்தில் வெளியான விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தில் ஒற்றைக்கண் மனிதன் ஒருவனை படக்குழுவினர் பிரம்மாதமாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் உருவாக்கியிருந்தனர். இந்த கேரக்டரை குழந்தைகள் வெகுவாக ரசித்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு கற்பனையில் மட்டுமே உருவாகும் இதுபோன்ற கேரக்டர்கள் நமது நிஜவாழ்வில் தோன்றுமா? என்பதை நினைத்து பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கும்.
இந்நிலையில் எகிப்து நாட்டில் உண்மையிலேயே ஒற்றைக்கண் கொண்ட ஒரு குழந்தை பிறந்துள்ளது. நெற்றியில் மட்டும் ஒரே ஒரு கண்ணை உடைய இந்த குழந்தையை நூற்றுக்கணக்கானோர் வந்து பார்த்துவிட்டு செல்வதால் அந்த பகுதியே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த குழந்தைக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் இதுகுறித்து கூறியபோது, ‘குழந்தை தாயின் கருவில் இருக்கும்போது cyclopia என்ற நோயினால் தாக்கப்பட்டுள்ளதாக இவ்வாறு பிறந்ததாகவும், மிகவும் அரிதாகவே இதுபோன்று ஒற்றைக்கண்ணுடன் குழந்தை பிறக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த குழந்தை ஒற்றக்கண்ணுடன் பிறந்தது மட்டுமின்றி மூக்கே இல்லாமல் பிறந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த குழந்தை பிறந்த சில நிமிடங்களில் பரிதாபமாக மரணம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.