இன்று முதல் செக் குடியரசு’ நாட்டின் பெயர் மாற்றம். புதிய பெயர் என்ன தெரியுமா?
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செக் குடியரசு நாட்டுக்கு ‘செக்கியா’ என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பெயர் நிர்வாக வசதிக்காக மாற்றப்பட்டதாக அந்நாட்டின் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று முதல் “செக் குடியரசு’ என்ற பெயருடன், “செக்கியா’ என்ற பெயரிலும் அந்நாடு அழைக்கப்படும்.
பல ஐரோப்பிய நாடுகளின் அதிகாரப்பூர்வ பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டுள்ளது. இருப்பினும் அவற்றை எளிதாக குறிப்பிடுவதற்கேற்ப ஒற்றைச் சொல் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 1993-ஆம் ஆண்டு ஸ்லோவேகியாவிடமிருந்து பிரிந்த செக் குடியரசுக்கு அத்தகைய ஒற்றைச் சொல் பெயர் இதுவரை இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது “செக்கியா’ என்ற ஒற்றைச் சொல் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு அந்நாட்டின் அதிபர் மிலோஸ் ஸிமான், பிரதமர் பூஸ்லாவ் சொபோட்கா, அந்நாட்டின் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் ஆகியோர் சமீபத்தில் பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில் தற்போது அந்தப் பெயருக்கு அரசு ஒப்புதல் வழங்கியது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வார்த்தையை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எளிதில் பயன்படுத்தலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.