டி டே. திரைவிமர்சனம்

விறுவிறுப்பான ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் கொடுத்த படத்தை கொடுத்த நிகில் அத்வானிக்கு ஒரு பாராட்டை தாராளமாக தெரிவிக்கலாம்.

வெளி உலகத்திற்கு பாகிஸ்தானில் இருந்து தங்கம் வியாபாரம் செய்வது போல நடித்து இந்தியாவை சீர்குலைக்க முற்படும் தீவிரவாதி இக்பால் சேத்தை பிடிக்க இந்திய ரா அமைப்பு தீவிர முயற்சி செய்கிறது. இக்பாலை பிடிக்க ரா அமைப்பு தலைவர் அஸ்வினிரா, மிகச்சிறந்த அதிகாரியான வாலிகானை தேர்ந்தெடுக்கிறார்.

இக்பாலுக்கு இந்திய அரசால் ஆபத்து என்பதை அறிந்த பாகிஸ்தான், அவருக்கு தகுந்த பாதுகாப்பு கொடுத்து அவரை பற்றிய தகவல்களை வெளியிடாமல் பாதுகாத்து வருகிறது. இந்நிலையில் இக்பால் தனது மகனின் திருமணத்திற்காக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பையும் மீறி கலந்து கொள்ள முடிவு செய்கிறார்.

இந்த விபரம் தெரிந்து ரா அமைப்பு வாலிகானுடன் ஒரு டீமை அமைத்து இக்பாலை என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார்கள். அவர்களின் திட்டம் நிறைவேறியதா என்பதை ஆக்ஷன் கலந்த த்ரில்லருடன் விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நிகில் அத்வானி.

ரா அமைப்பு அதிகாரியாக வரும் இர்பான்கான் நடிப்பு மிகவும் இயல்பானது. அலட்டல் இல்லாமல் முகத்திலேயே அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

வில்லன் இக்பாலாக நடித்திருக்கும் ரிஷிகபூர் நடிப்பு மிக அபாரம். பார்வையாலேயே நிறைய வசனத்தை பேசிவிடுகிறார்.

கராச்சியில் பாலியல் தொழிலாளியாக வரும் ஸ்ருதிஹாசனின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. ஒரு பாடலை அவரே பாடியும் இருக்கிறார். இவ்வளவு அருமையான நடிப்பை கொடுத்த ஸ்ருதிஹாசன், ஏன் இந்த படத்தை தமிழில் மொழிபெயர்க்க எதிர்ப்பு தெரிவித்தார் என்பதுதான் புரியவில்லை.

வலுவான் திரைக்கதை, இயல்பான காட்சியமைப்புகள், ஸ்ருதிஹாசனின் கண்கலங்க வைக்கும் நடிப்பு என பல சிறப்பு அம்சங்கள் நிறைந்த அருமையான ஆக்ஷன் த்ரில்லர் படம்தான் டி டே.

Leave a Reply