தந்தையின் தற்கொலையை தடுத்து நிறுத்திய 2 வயது மகன். உணர்ச்சி மிகுந்த புகைப்படங்கள்.

  Suicidal Dad Talked Down By Two-Year-Old Son சீனாவில் உள்ள ஒருவர் தனது வேலையை இழந்ததால் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்ற கவலையில் தற்கொலைக்கு முயற்சி செய்த வேளையில் அவரது இரண்டு மகன் தனது கண்ணீருடன் கூடிய வேண்டுகோளால் தற்கொலை முடிவை மாற்றியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சீனாவை சேர்ந்த 39 வயது ராய் நீ’ என்பவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு திடீரென வேலை பறிபோனது. வருமானத்தை திடீரென இழந்த அவர், தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது, வீட்டு வாடகை உள்பட இதர செலவுகளை எப்படி சமாளிப்பது என்ற கவலையில் தனது வீட்டின் அருகில் இருந்த பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

தந்தை ஆற்றின் பாலத்தில் இருந்து குதிக்க இருந்ததை பார்த்த அவரது இரண்டு வயது மகன் தந்தையை நோக்கி, குதிக்காதீங்க..திரும்பி வந்துவிடுங்கள்’ என்று மழலை மொழியில் கத்தியதை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மீட்புப்படையினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

மகனின் அழுகுரல் கேட்டு திடுக்கிட்ட ராய் நீ, உடனே மனம் மாறி மீட்புக்குழுவினர்களின் உதவியால் மீட்கப்பட்டார். இந்த உணர்ச்சி மிகுந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளனர். நமது சென்னை டுடே நியூஸ் வாசகர்களுகாக இந்த உணர்ச்சி மிகுந்த புகைப்படங்கள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.Suicidal Dad Talked Down By Two-Year-Old SonSuicidal Dad Talked Down By Two-Year-Old SonSuicidal Dad Talked Down By Two-Year-Old Son

Leave a Reply