மேற்குவங்க மாநிலத்தில் மக்களின் செல்வாக்கை பெற்று அசைக்க முடியாத நிலையில் இருக்கும் மம்தா பானர்ஜியின் செல்வாக்கிற்கு ஈடுகொடுக்கும் வகையில் பாரதிய ஜனதா பலகட்ட திட்டங்களை தீட்டி வருகிறது என கூறப்படுகிறது.
சமீபத்தில் சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் மம்தா பானர்ஜியின் அமைச்சர்களை கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த பாஜக மேலிடம் தற்போது மேற்குவங்கம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் நன்கு அறிமுகமான பிரபல கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியை கட்சியில் சேர்க்க தீவிர முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது பா.ஜனதா கட்சியின் மேலிட தலைவர்களுடன் கங்குலி நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், இதே போல பாஜகவின் தலைமையும், கட்சியின் மூத்த தலைவர்களும் கங்குலியுடன் அடிக்கடி தொடர் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டன்களில் ஒருவராக வலம் வந்த சவுரவ் கங்குலி 13 டெஸ்ட் மற்றும் 311 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.