பிரபல நடிகைக்கு விமானத்தில் பாலியல் தொல்லை: இன்ஸ்டாகிராம் பதிவால் பரபரப்பு
அமீர்கான் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘டங்கல்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகை ஜைரா வாசிம். இவர் சமீபத்தில் டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்றபோது தனக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது நபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நடுத்தர வயது நபர் ஒருவர் தனது காலால் எனது கழுத்து மற்றும் பின்பக்கத்தில் தடவி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனால் பயணம் முழுவதும் தான் தர்மசங்கடத்தில் இருந்ததாகவும், அவர் கண்ணீருடன் பதிவு செய்துள்ளார்
இந்த சம்பவத்தை தான் தனது மொபைல்போனில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும், தான் அமைதியாக இருந்ததை அந்த நபர் சாதகமாக எடுத்து கொண்டு தனக்கு தொல்லைகளை தொடர்ந்ததாகவும் அவர் கூறினார். மேலும் தனக்கு அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களும், விமான ஊழியர்களும் எந்தவித உதவியையும் செய்யவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்
https://www.instagram.com/p/Bcfi7-rhCLA/?hl=en&tagged=zairawasim