2 குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு சலுகைகளை கட் செய்ய வேண்டும். மத்திய அமைச்சர்

2 குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு சலுகைகளை கட் செய்ய வேண்டும். மத்திய அமைச்சர்
sadhvi-jyoti
பயங்கரவாத சம்பவங்களுக்கு தடை விதிக்காமல், அதிக குழந்தைகள் பெற்று கொள்வதற்கு தடை விதிக்காமல்  “பாரத மாதா கீ ஜே’ என்ற முழக்கத்தைக் கூறுவதற்குத் தடை விதித்திருக்கிறார்கள். நமது நாட்டில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு அரசின் சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறியதாவது: “தாரூல் உலூம் தேவ்பந்த்’ என்ற அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள், “பாரத மாதா கீ ஜே’ என்ற முழக்கத்தைக் கூறுவதற்குத் தடை விதித்துள்லனர். அதற்குப் பதிலாக, பயங்கரவாதத்துக்கு எதிராக அவர்கள் தடை விதித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

சமீபத்தில் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  துரதிருஷ்டவசமாக, தேச விரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த முழக்கங்களூக்கு நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள்  ஆதரவு அளித்தனர்.

மேலும், நமது நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்வது கவலையளிக்கிறது. அதனால், இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசின் சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும். அப்படி அவர்களுக்கு அரசின் சலுகைகள் அளிக்கப்பட்டு இருந்தால் அதனை திரும்பப் பெறப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். மத்திய இணை அமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Today News: Darul Uloom should have issued fatwa against terrorism: Sadhvi Niranjan Jyoti

Leave a Reply