மின்கட்டணம் செலுத்த மேலும் ஒரு மாதம் அவகாசம்

மின்சார வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் முதல்கட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏற்கனவே மின் கட்டணம் கட்ட கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 25 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலான மின் கட்டணத்தை செலுத்த மே 6ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மின்சார வாரியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது

மேலும் வரும் மாத மின்கட்டணத்தை முந்தைய மாதக் கணக்கீட்டின்படி செலுத்தலாம் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும்படியும், மின் கட்டணம் செலுத்துவதற்காக மின்சார அலுவலத்திற்கு நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மின்சாரக்கட்டணம் கட்டுவதற்கு மேலும் ஒரு மாசம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்

Leave a Reply