பிரதமர் பின்வரிசையில் உட்காருவதா? எம்பி பதவியை ராஜினாமா செய்த கேமரூன்

பிரதமர் பின்வரிசையில் உட்காருவதா? எம்பி பதவியை ராஜினாமா செய்த கேமரூன்

cameroonஐரோப்பிய நாடுகளில் இருந்து விலக வேண்டும் என்று பிரிட்டன் மக்கள் முடிவு எடுத்ததை தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கேமரூன், தற்போது தனது எம்பி பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். பிரதமர் பதவியை இழந்ததால் பாராளுமன்றத்தில் அவருக்கு எம்பி என்ற முறையில் பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பிரதமர் பதவியில் இருந்துவிட்டு பின்வரிசையில் உட்கார விரும்பாத கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கேமரூன், பிரதமராக இருந்துவிட்டு பின்வரிசையில் உட்கார முடியாது என்பதால் ராஜினாமா செய்துவிட்டதாகவும் எனினும் தன்னுடைய மக்கள் பணி என்றும் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

டேவிட் கேமரூன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பது இங்கிலாந்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் விட்னி என்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி-ஆக கேமரூன் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply