மும்பை நீதிமன்றம் பொதுமன்னிப்பு அளித்தால் அப்ரூவர் ஆகத்தயார். பாகிஸ்தான் தீவிரவாதி

மும்பை நீதிமன்றம் பொதுமன்னிப்பு அளித்தால் அப்ரூவர் ஆகத்தயார். பாகிஸ்தான் தீவிரவாதி
david headly
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தால் 35 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் டேவிட் ஹெட்லி மீது மும்பை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. கடந்த 2006, 2007, 2008-ம் ஆண்டுகளில் மும்பையில் சுற்றுப்பயணம் செய்து, முக்கிய இடங்களை வீடியோவில் பதிவு செய்து, அவற்றை பாகிஸ்தானிலுள்ள லஷ்கர் தீவிரவாதிகளிடம் ஒப்படைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கின் விசாரணை நேற்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

அமெரிக்காவில் இருந்து காணொளி காட்சியில் மூலம் இந்த வழக்கு குறித்து தெரிவித்த டேவிட் ஹெட்லி, “மும்பை நீதிமன்றம் தனக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக இருந்தால், மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவராக மாறத் தயார் என கூறியுள்ளார். டேவிட் ஹெட்லிக்கு பொதுமன்னிப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English Summary:David Headley is pardoned, turns 26/11 approver

Leave a Reply