தாவூத் இப்ராகிம் சகோதர் மகன் அமெரிக்காவில் கைது.
மும்பை தொடர்வெடிகுண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டதோடு, இந்தியாவில் பல தாக்குதல்களை நடத்தியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை பிடிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் தாவூத் இம்ராகிம் அவர்களுடய சகோதரர் மகன் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
தாவூத் இப்ராகிமின் சகோதரர் சோகைல் கஸ்கர் என்ற 36வயது நபர் மீது தீவிரவாதிகளுடன் சட்டவிரோத போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டது, வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கியது, ஏவுகணை ஏவும் தொழில்நுட்பத்தை விற்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சோஹைலுடன் மேலும் 2 பாகிஸ்தான் நபர்களையும் மெரிக்க போதைப் பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த மூவரும் ஸ்பெயினிலிருந்து அமெரி்க்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும், இவர்கள் கடந்த டிசம்பர் மாதமே கைது செய்யப்பட்ட போதிலும் தற்போதுதான் இந்த தகவல் வெளியில் தெரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள சோகைல் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் ஆனால் அவருக்கு 25 ஆண்டுகள் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது