தாவூத் இப்ராஹிம் ஆப்கானிஸ்தானிற்கு ஓட்டம். மோடிக்கு பயந்து இடம் மாறியதாக தகவல்.

8இந்திய நாடாளுமன்ற தேர்தலில் அபாரமாக வெற்றி பெற்று பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதால் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராஹிம் தனது இருப்பிடத்தை ஆப்கானிஸ்தானுக்கு மாற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவுத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என நரேந்திர மோடி ஆவேசமாக கூறினார். இதற்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

 இந்நிலையில் மோடி பிரதமராக இருப்பதால், பாகிஸ்தானில் இருப்பது பாதுகாப்பாக இருக்காது என எண்ணி, ஆப்கானிஸ்தானுக்கு தாவூத் இப்ராஹிம் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்லேடனை பாகிஸ்தானின் சம்மதம் இல்லாமலேயே அமெரிக்கா வேட்டையாடியது போல், மோடி அதிரடி நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடும் என பயந்தே தாவூத் பாகிஸ்தானை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை பயமில்லாமல் பாகிஸ்தானில் செயல்பட்ட தாவூத், மோடி பதவியேற்க உள்ளதால் ஆப்கானிஸ்தான் சென்றுள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply