தாவூத் இம்ப்ராஹிமின் ரூ1,000 கோடி சொத்துக்களை முடக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்புக்கு காரணமானவனும், நிழலுலக தாதாவுமான தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏற்கனவே முடக்கியிருக்கும் நிலையில், தற்போது இங்கிலாந்தில் இருக்கும் மேலும் ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கலை முடக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மும்பை தொடர் வெடிகுண்டு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான ரூ.1000 கோடி ரூபாய் சொத்துக்கள் குறித்த தகவல் மத்திய அரசுக்கு சமீபத்தில் கிடைத்தது. எனவே இந்த சொத்துக்களை முடக்கும் அதிரடி நடவடிக்கையில் மத்திய அரசு தற்போது முனைப்புடன் செயல்பட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தாவூத் இப்ராஹிக்கு சொந்தமான மற்ற நாடுகளில் உள்ள சொத்துக்களின் விவரங்களும் மத்திய அரசுக்கு தெரிய வந்துள்ளதாகவும், விரைவில் இந்த சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக
தகவல்கள் வெளிவந்துள்ளது.