இரண்டு முறை மரணம் அடைந்த தென்னாப்பிரிக்க அதிசய நபர்

இரண்டு முறை மரணம் அடைந்த தென்னாப்பிரிக்க அதிசய நபர்

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் கார் விபத்தில் மரணம் அடைந்து பின்னர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து மீண்டும் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் டர்பன் அருகே உள்ள க்வா மாசு நகரை சேர்ந்தவர் மிசிஷி கிஷே என்பவர் கார் விபத்தில் மரணம் அடைந்தார். இவரது உடல் மார்ச்சுவரியில் வைத்திருந்த நிலையில் திடீரென ஐந்து மணி நேரம் கழித்து உயிர் பிழைத்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள் மீண்டும் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி ஐந்து மணி நேரம் கழித்து அவர் மீண்டும் மரணம் அடைந்தார்

முதலில் சிகிச்சை செய்த மருத்துவர் கவனத்துடன் சிகிச்சை கொடுத்திருந்தால் மிசிஷி கிஷே உயிர் பிழைத்திருக்கலாம் என்று உறவினர்கள் கருத்து தெரிவித்தனர்.

Leave a Reply