டெட்லைன் என்று அழைக்கப்படும் மொபைல் அப்ளிகேஷன் உங்கள் ஆரோக்கியத்தை அளவிடும் அளவுகோலாக ஆப்பிள் ஐபோன் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த ஆப்ஸ் மூலம் ஒருவரின் எடை, உயரம், உடலின் சக்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் நடையின் அளவு ஆகிய தகவல்களை பதிவு செய்தால் உடனே நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வீர்கள், உங்கள் ஆயுட்காலம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு உங்கள் இறுதி நாளை இந்த டெட்லைன் ஆப்ஸ் ஏறத்தாழ சொல்லிவிடுகிறது .
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவன டூல்ஸ் மேம்பாட்டாளர் கிஸ்ட் எல் எல் சி என்பவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஒருவரின் மரணத்தை யாராலும் எந்த அப்ளிகேஷனும் முன் கூட்டியே துல்லியமாக கணிக்க முடியாது. ஆனால் இந்த ஆப்ஸ் மூலம் ஒருவரின் உடல் ஆரோக்கியத்தின் தற்போதைய நிலையைக் கணித்து சொல்லிட முடியும். மேலும் மருத்துவரின் ஆலோசனை வழங்கிட தேவை இருப்பின் அதையும் இந்த ஆப்ஸ் மூலம் கணித்துக் கொள்ள முடியும் என்றார்.
ஆனால் உடல் நலன் குறித்த தகவல்களை வைத்து தோரயமாக மரணம் வரும் நாளை இந்த ஆப்ஸ் சொல்லிவிடுகிறது என்பதுதான் தற்போது ஆப்ஸ் பிரியர்களின் பரபரப்பாக உள்ளது. சாகிற நாளை தெரிந்து கொண்டால் வாழ்கிற நாள் நிம்மதியாக இருக்காது என்ற நமது சூப்பர் ஸ்டார் வசனத்தை இந்த ஆப்ஸ் செய்தவர் கேட்கவில்லை என்று தெரிகிறது.