சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை: புதிய சட்டம்
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக 12 வயதுக்கும் குறைவான சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கொடூரம் அதிகமாகி வருவதை அடுத்து 12வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிப்பதற்கான அவசரச்சட்டத்தை மத்திய அரசு இன்னும் ஒரு சில நாட்களில் பிறப்பிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சட்ட அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுமிகள், குழந்தைகள் பலாத்காரத்தை தடுக்கக்கூடிய ஒரேவழி தூக்குத்தண்டனை விதிக்க அவசரச்சட்டம் பிறப்பிப்பதுதான். நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்ய வேண்டுமானால், ஜூலை மாதம்வரை காத்திருக்க வேண்டும். ஆதலால், அவசரச்சட்டம் தான் வழியாகும் எனத் தெரிவித்தார்.
தற்போதுள்ள போஸ்கோ சட்டப்படி, குழந்தையைப் பலாத்காரம் செய்பவருக்கு அதிகபட்சமாக வாழ்நாள் சிறை மட்டுமே அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும். ஆனால், இந்த முறையில் திருத்தம் செய்யப்பட்டு பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டாலே தூக்கு தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது