ஜனவரி 13வரை பெட்ரோல் நிலையங்களில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் அனுமதி

ஜனவரி 13வரை பெட்ரோல் நிலையங்களில்  டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் அனுமதி

பெட்ரோல் நிலையங்களில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை  தேய்ப்பதால், 1% வரி விதிப்பை வங்கிகள் விதிப்பதாகவும், இதனால் பெட்ரோல் முகவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த வரிவிதிப்பை எதிர்த்து இன்று அதிகாலை 12 மணி முதல் பெட்ரோல் நிரப்ப டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்பதில்லை என்று பெட்ரோல் நிலையங்கள் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டன.

இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இன்னும் பெரும்பாலான ஏடிஎம்கள் திறக்கப்பட்டாத நிலையில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை வைத்தே பெரும்பாலானோர் பெட்ரோல்களை நிரப்பி வந்தனர். தற்போது அதற்கும் வழியில்லாததால் பொதுமக்கள் குறிப்பாக லாரி உரிமையாளர்கள் கடும் அவதியில் உள்ளனர்.

இதுகுறித்து டு பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு நாட்டில் தற்போது நிலவிவரும் பணத் தட்டுப்பாடு பிரச்சனையை கருத்தில் கொண்டு, கார்டு பரிவர்த்தனைக்கு அனுமதி வழங்கும்படி, பெட்ரோல் நிலைய உரிமையாளர்களை, மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் வரும் 13ம் தேதி வரை கார்டு பரிவர்த்தனைக்கு, அனுமதி அளிக்க ஒப்புக்கொண்டது.

ஆனாலும் இன்று காலை பெட்ரோல் நிரப்ப சென்ற பலர்,  டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பெட்ரோல் நிலையங்கள் அனுமதிக்கவில்லை என்றே புகார் கூறி வருகின்றனர்.

Leave a Reply