பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதற்கான காலம் வந்து விட்டது. ஜம்முகாஷ்மீர் துணைமுதல்வர்

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதற்கான காலம் வந்து விட்டது. ஜம்முகாஷ்மீர் துணைமுதல்வர்

nirmal singhஇந்திய எல்லையோர கிராமங்களை தொடர்ந்து தாக்கி வரும் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதற்கான காலம் வந்து விட்டது என ஜம்மு- காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியா -பாகிஸ்தான் நாடுகளிடையேயான வெளியுறவு செயலாளர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை ரத்தானதை தொடர்ந்து இந்திய எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் வசிக்கும் அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் காயமடைந்தும் வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களால் காயமடைந்து ஜம்மு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஜம்மு-காஷ்மீர் மாநில துணை முதல்வர் நிர்மல் சிங் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். காயம் அடைந்தவர்களுக்கு தேவையான உயர்தர சிகிச்சைகள் அனைத்தையும் மாநில அரசு வழங்கும் என்று உறுதி கூறிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இந்திய எல்லையில் உள்ள கிராமங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பொதுமக்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

பாகிஸ்தானின் இந்தச் செயலை இந்தியா சகித்துக் கொள்ளாது.  பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவரை இந்தியா கைது செய்துள்ள நிலையில், அந்நாடு தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாதத் தாக்குதல்கள், ஊடுருவல்கள், அத்துமீறல்கள் ஆகிய செயல்களில் பாகிஸ்தான் ஈடுபடுவதால், அந்நாடு உலக நாடுகளை எதிர்கொள்ள முடியாமல் உள்ளது.

பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன. அதுகுறித்து இந்தியாவின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாத காரணத்தாலேயே தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை அந்நாடு தவிர்த்தது.  பயங்கரவாதத்துக்கு உதவுவதையும், ஊக்குவிப்பதையும் உலக நாடுகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. எனவே பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதற்கான காலம் வந்து விட்டது

இவ்வாறு ஜம்மு- காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் கூறியுள்ளார்.

Leave a Reply