தேனோடு நெல்லிக்காயை ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை நீங்கும்.
தினமும் மதிய உணவில் அரைக்கீரையைச் சேர்த்து வந்தால் இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.
பேயன் வாழைப்பழத்தோடு தேன் கலந்து
சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
சிறிய வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி உண்டு வந்தால் நன்கு தூக்கம் வரும்.
பூசணிக்காயைப் பருப்போடு சேர்த்து அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
பச்சை வெங்காயத்தை உண்டு வந்தாலும் நன்றாகத் தூக்கம் வரும்.
கசகசாவை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தூக்கம் வரும்.
தினமும் இரவு தூங்குவதற்கு முன் இரண்டு வாழைப்பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் சூடு தணிந்து நன்றாகத் தூக்கம் வரும்.