பொறுத்தது போதும். பொங்கி எழுவோம். சசிகலாவுக்கு எதிராக மக்களை திரட்டும் தீபா

பொறுத்தது போதும். பொங்கி எழுவோம். சசிகலாவுக்கு எதிராக மக்களை திரட்டும் தீபா

அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் தவிர தமிழகத்தின் ஒட்டு மொத்த பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் சசிகலா முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த செயல் இன்னொரு மக்கள் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தவித முன் அனுபவமும் இல்லாத ஒருவர் முதல்வர் பதவியை ஏற்பதை பொதுமக்கள் விரும்பாத நிலையில் சசிகலாவுக்கு எதிராக தமிழக மக்களை ஒன்றுதிரட்டுவே என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று தெரிவித்துள்ளது மக்களுக்கு ஆறுதலாக உள்ளது.

இதுகுறித்து தீபா மேலும் கூறியதாவது, ‘முதல்வரை மக்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். சசிகலா தேர்வு செய்யப்பட்டது மக்களின் மனநிலைக்கு எதிரான செயல். சசிகலாவிற்கு எதிராக மக்களை திரட்டப் போகிறேன்.

தமிழக மக்கள் சுதந்திரம் இழந்தது போன்ற சூல்நிலை உருவாகி உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். பொறுத்தது போதும் நல்ல எதிர்காலத்துக்காக நாம் போராடுவோம். நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்தவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும். என்றார்.

Leave a Reply