தீபா ஆரம்பித்தது பேரவை, நான் ஆரம்பிக்கபோவதுதான் கட்சி. தீபா கணவர் மாதவன்

தீபா ஆரம்பித்தது பேரவை, நான் ஆரம்பிக்கபோவதுதான் கட்சி. தீபா கணவர் மாதவன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சி தொடங்கி ஒரு மாதம்தான் ஆகின்றது. அதற்குள் அந்த கட்சி இரண்டாக உடைந்துள்ளது. கட்சியை உடைத்தவர் அவரது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபா சமீபத்தில் எம்ஜிஆர் அம்ம தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அவர் தற்போது ஆர்.கே.நகரில் போட்டியிடவும் உள்ளார். இந்நிலையில் இந்த பேரவையில் நிர்வாகிகள் தேர்வு செய்வதில் தீபாவுக்கும் அவருடைய கணவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தீபாவின் கணவர் மாதவன் நேற்றிரவு ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் புதிய கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

தீபா ஆரம்பித்துள்ளது அரசியல் கட்சி இல்லை என்றும் அது ஒரு பேரவைதான் என்றும், நான் ஆரம்பிக்கப்போவதுதான் கட்சி என்றும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தொண்டர்கள்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்

Leave a Reply