தினகரன் அணியில் தீபக்? தீபா மெளனம் ஏன்?

தினகரன் அணியில் தீபக்? தீபா மெளனம் ஏன்?

டி.டி.வி.தினகரனின் மாமியார் சந்தானலெட்சுமி, கடந்த 27-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு கடந்த 28-ம் தேதி, தஞ்சையில் நடைபெற்றபோது பெரும்பாலான அதிமுகவினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தஞ்சை காந்தி நகருக்கு வந்தார்.

தீபக்கை பார்த்த தினகரன், திவாகரன் ஆகிய இருவருமே வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். மேலும் வீட்டின் உள் இருந்த டாக்டர் வெங்கடேஷைப் பார்த்ததும் தீபக் கைகளை விரித்தப்படி அழத்தொடங்கினார். தீபக்கின் வரவும், அவருடைய உணர்ச்சி வெளிப்பாட்டையும் சசிகலா குடும்பத்தினர் ஆச்சரியமாக பார்த்ததாக கூறப்படுகிறது.

தீபக், சசிகலாவின் கணவர் நடராஜனின் பிடியில் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, அவர் தினகரன் பக்கம் சாய ஆரம்பித்திருப்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தீபக்கின் சகோதரி தீபாவின் நீண்ட மெளனம் யாருக்கும் புரியாத புதிராக இருப்பதாகவே தெரிகிறது. மேலும் தீபக்கை அடுத்து தீபாவும் மிக விரைவில் தினகரன் பக்கம் சாய வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

Leave a Reply