இன்று முதல் அரசியலில் குதிக்கிறேன். பிப்.24ல் கட்சி ஆரம்பிக்கின்றாரா?
ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுகவின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள சசிகலாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. தீபாவுக்கு அதிமுக தொண்டர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சற்று முன்னர் எம்.ஜி.ஆர் நினைவகத்தில் மலரஞ்சலி செலுத்திய தீபா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்
இந்த சந்திப்பில், ‘அதிமுக-வை உருவாக்கி மக்களாட்சியை மலர்ச் செய்தவர் எம்.ஜி.ஆர். அவருடைய பாதையில் இன்று முதல் என் அரசியல் பயணத்தை தொடங்குகிறேன். ஜெயலலிதா பிறந்தநாளான பிப் 24ல் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்.
நான் ஒரு சாதாரண குடும்ப பெண். எனக்கு ஆதரவளித்த அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி என்று கூறினார். தீபாவின் அரசியல் பிரவேசம் சசிகலா தரப்பினர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.