அமெரிக்க எம்.பிக்களுடன் இந்திய வம்சாவளியினர்களின் தீபாவளி கொண்டாட்டம்.

அமெரிக்க எம்.பிக்களுடன் இந்திய வம்சாவளியினர்களின் தீபாவளி கொண்டாட்டம்.
deepavali
இந்து மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.  சுமார் 100 கோடி பேர் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடி வரும் இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை  நவம்பர் 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று தீபாவளி சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.  இந்த விழாவில் சுமார் 30 அமெரிக்க எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவை அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளிகள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதிநிதிகள் சபையின் ஒரே இந்திய வம்சாவளி உறுப்பினரான அமி பெரா, ‘இந்தியா, அமெரிக்கா இடையிலான நல்லுறவுக்கு, இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்காற்றி வருகின்றனர்’ என்று கூறினார்.

இந்த விழாவில் செனட் சபை உறுப்பினர்களான மார்க் வார்னர், டிம் கெயின், வெளிவிவகார கமிட்டி தலைவர் எட் ராய்ஸ், ஜோ கிரவ்லி உள்ளிட்ட பல்வேறு எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும், தீபாவளி பண்டிகை நினைவாக அமெரிக்காவில் தபால் தலை வெளியிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்

Leave a Reply