ஏன் அவதூறு வழக்குகள் தொடரக்கூடாது. ஒரு சாமானியனின் கேள்வி

ஏன் அவதூறு வழக்குகள் தொடரக்கூடாது. ஒரு சாமானியனின் கேள்வி

case‘எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அதிக அளவில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுவருகின்றன. அரசின் கொள்கை முடிவுகளை விமர்சனம் செய்தால், அதற்காக அவதூறு வழக்கு தொடரவேண்டிய அவசியம் என்ன? உடல்நலம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு, ஓய்வு எடுப்பது குறித்து கூறியதற்கு, குடிநீர் பற்றாக்குறை பற்றி பேசியதற்கு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனச் சொன்னதற்கு எல்லாம் அவதூறு வழக்கு தமிழ்நாட்டில் தொடரப்பட்டுள்ளது. இது சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் அடங்கிய பெஞ்ச் தெரிவித்த கருத்து.

தமிழகத்தில் இருந்து மட்டும் ஏன் இவ்வளவு அவதூறு வழக்குகள் வருகின்றன. மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சியே இல்லையா? அல்லது விமர்சனம் செய்வதே இல்லையா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகின்றன. ஆனால் மற்ற மாநிலங்களுக்கும் தமிழகத்திற்கும் இருக்கும் ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால் இங்குள்ள எதிர்க்கட்சிகள் கண்ணை மூடிக்கொண்டு ஆளுங்கட்சி கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பதுதான். இது அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,.

ஏன் தமிழகத்தில் இருந்து மட்டும் இத்தனை அவதூறு வழக்குகள் என்ற கேள்விக்கு பதில் தமிழகத்தில்தான் அதிகளவு அரசின் மீது அவதூறுகள் சுமத்தப்படுகின்றன என்கிற ரீதியில் ஏன் பார்க்கக்கூடாது. ஒரு தெருவில் ஐந்து கொலை நடந்தால் ஐந்து வழக்குகள் பதிவாகும். இன்னொரு தெருவில் பத்து கொலை நடந்தால் அங்கு பத்து வழக்குகள் பதிவாகும். ஏன் அந்த தெருவில் மட்டும் ஐந்து வழக்குகள், இந்த தெருவில் பத்து வழக்குகள் என்று கேள்வி கேட்பதுபோல்தான் ஏன் அவதூறு வழக்குகள் அதிகம் தமிழகத்தில் இருந்து வருகிறது என்ற கேள்வியும் உள்ளது. அவதூறுகள் அதிகம் இருக்கும் இடத்தில் அவதூறு வழக்குகள் அதிகம் பதிவாகத்தான் செய்யும்.

தமிழகத்தில் இதுவரை ஒரே முறையாவது ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒற்றுமையுடன் சட்டசபயை நடத்திய வரலாறு உண்டா?, ஒருமுறையாவது ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பிரதமரை பார்த்து கோரிக்கை வைத்ததுண்டா? எந்த ஒரு பிரச்சனையிலும் ஆளுங்கட்சி நல்ல நடவடிக்கை எடுத்தாலும் ஆளுங்கட்சிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதையும் குறை கூறுவதுதான் நம்முடைய எதிர்க்கட்சியின் முக்கிய பணி. அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமே என்ற கவலை துளியும் இல்லை.

எனவே ஏன் இத்தனை அவதூறு வழக்குகள் வருகின்றன என்பதை கணக்கு பார்க்காமல் இத்தனை அவதூறு வழக்குகள் பதிவாகும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் ஏன் நடந்து கொள்கின்றன என்கிற ரீதியில் உச்சநீதிமன்றம் யோசித்தால் நல்லது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. உடல்நலன் குறித்தும் ஓய்வு குறித்தும் கருத்து தெரிவிப்பது தவறு அல்ல, ஆனால் 90ஐ தாண்டிய ஒருவர் 60ஐ தாண்டிய ஒருவரை ஓய்வு எடுக்க சொல்வது நன்மைக்கா? நக்கலுக்கா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்/

உச்சநீதிமன்றம் இதில் கவனம் செலுத்தவில்லை என்றால் மக்கள் நலன் என்று கூறிக்கொண்டு அரசு செய்யும் அனைத்து திட்டங்களையும் எதிர்க்கட்சிகள் முடக்கும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply