நெகட்டிவ் கமெண்ட்ஸை உடனே டெலிட் செய்யவும்: கஸ்டமருக்கு எச்சரிக்கை விடுத்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

நெகட்டிவ் கமெண்ட்ஸை உடனே டெலிட் செய்யவும்: கஸ்டமருக்கு எச்சரிக்கை விடுத்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

தங்கள் நிறுவனத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவு செய்த நெகட்டிவ் கமெண்ட்ஸை உடனே நீக்க வேண்டும் என ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஓலா ஸ்கூட்டர் வாங்கிய கஸ்டமர் ஒருவர் அந்நிறுவனத்டிற்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் நெகட்டிவ் கமெண்ட்ஸை பதிவு செய்தார்

இதனையடுத்து அவருக்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பிய எலக்ட்ரிக் நிறுவனம் அடுத்த 24 மணி நேரத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த நெகட்டிவ் கமெண்ட்ஸை நீக்க வேண்டும் என்றும் இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது

இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது