வரும் பாராளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகளை ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமாக வெளியிட்டு வரும் வேளையில் டெல்லியில் உள்ள அசோக் மாலிக என்ற கருத்துக்கணிப்பு நிறுவனர், தன்னுடைய தேர்தல் கருத்துக்கணிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
இந்த கருத்துக்கணிப்பின்படி தமிழகத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக 30 முதல் 35 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறியுள்ளார். உளவுத்துறையும் கிட்டத்தட்ட இதே அளவு தொகுதிகளைத்தான் சமீபத்தில் முதல்வரிடம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உளவுத்துறை கூறியது அதிமுகவுக்கு 32 தொகுதிகள்.
திமுக 5 முதல் 10 தொகுதிகள் வரை வெற்றி பெறும், மூன்றாவது இடத்தை பிடித்தாலும் பாரதிய ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் ஆளாளுக்கு ஒரு எண்ணிக்கையை தெரிவித்துள்ள நிலையில் இவருடைய கருத்துக்கணிப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.