டெல்லியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 28 தொகுதிகளை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி பதவியேற்று அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வரானார். இந்நிலையில் நேற்று சட்டமன்றம் கூடி, அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுக்கொண்டனர். இன்று ஆம் ஆத்மி கட்சி தனது மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
ஏற்கனவே 28 எம்.எல்.ஏக்களை கொண்ட ஆம் ஆத்மிக்கு 8 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் ஆதரவு தருவதாக வாக்குறுதி அளித்திருப்பதால் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுவிடும் என்றே கருதப்படுகிறது.
மேலும் பதவியேற்ற இரண்டே நாட்களில் இலவச குடிநீர் திட்டம், மற்றும் மின்கட்டணத்தை பாதியை குறைப்பது போன்ற வாக்குறுதிகளை அரவிந்த் கெஜ்ரிவால் நிறைவேற்றியுள்ளதால் ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட அரவிந்த் கெஜ்ரிவால் முடிவெடுத்துள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றுவிடும் என்றே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் இலவச குடிநீர் மற்றும் மின்கட்டணம் குறைப்பு குறித்து பாரதிய ஜனதா கடும் கண்டனம் எழுப்பியுள்ளது. இன்று நடக்கவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அந்த கட்சி பிரச்சனையை எழுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.