8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி: மீண்டும் முதலிடத்தை பிடித்த டெல்லி!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 33வது போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக ஐதராபாத் அணியை வீழ்த்தியது .

நேற்றைய போட்டியில் 135 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் டெல்லி அணி மீண்டும் முதலிடத்தை பிடித்தது என்பதும், சென்னை இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நார்ட்ஜி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.