ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: ஐதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: ஐதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி.

cricket2ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணி, ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யுமாரு ஐதராபாத் அணியை கேட்டுக்கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி, வார்னர் மற்றும் தவான் நல்ல தொடக்கத்தை கொடுத்தபோதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி ஆடியதால் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. வார்னர் 46 ரன்களும், தவான் 34 ரன்களும் எடுத்தனர்.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியின் டீ காக் 44 ரன்களும், பேண்ட் 39 ரன்களும், சாம்சன் 34 ரன்களும் எடுத்தனர்.

இன்றைய ஆட்டம் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

Leave a Reply