டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை கலைக்க சதியா?

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை கலைக்க சதியா?
aravind kejriwal
டெல்லியில் நடைபெறும் நேர்மையான ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து பெங்களூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

டெல்லியில் பாஜக நிர்வாகத்தில் உள்ள 3 மாநகராட்சிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். டெல்லி மாநகராட்சிகளில் ஏற்பட்ட நிதி இழப்புக்கு மாநில அரசுதான் காரணம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கப்பட்டு வருகிறாது. கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சியை நிர்வகித்து வரும் பாஜக ஊழலில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் ஏதோ பிரச்னை இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க மாநகராட்சி ஊழியர்கள் மூலம் வேலைநிறுத்தப் போராட்டம் தூண்டிவிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு சர்வாதிகாரச் சிந்தனை உள்ளது. அருணாசல பிரதேசத்தைப் போல டெல்லியில் குழப்பம் நிலவுவதாகக் காரணம் காட்டி, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு சதித்திட்டம் தீட்டியிருப்பதாகத் தெரிகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறுவது உறுதி. டெல்லி மாநகராட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தும் நிலை உருவாகியுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் சார்ந்துள்ள 19 தொழிற்சங்கங்கள், மாநகராட்சியைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply