டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி எடுத்த திடீர் முடிவு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பனிப்போர் நடந்து வரும் நிலையில் மத்திய அரசின் முக்கிய பணியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி திடீரென விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கடந்த 22 ஆண்டுகளாக வருமான வரித்துறையின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடைசியாக டெல்லியில் உள்ள வருமான வரிகள் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் ஆணையாளராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது திடீரென தாமாக முன்வந்து விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பம் செய்தார்.
அவருடைய விண்ணப்பத்தை ஏற்று, அவரை பணியில் இருந்து விடுவிப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் அனுப்பியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Delhi CM Aravind Kejriwal wife resigned