காவல்துறையினர்களின் தடையை மீறி மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு எதிராக இன்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த கெஜ்ரிவால் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஒரு மாநில முதலமைச்சரே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதால் டெல்லியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
டெல்லியில் நடந்த சில குற்றங்களில் தொடர்புடைய காவல்துறையினர்களை இடைநீக்கம் செய்யுமாறு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி காவல்துறை ஆணையரை கேட்டுக்கொண்டார். அதற்கு காவல்துறை ஆணையர் மறுப்பு தெரிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவிடம் சந்தித்து நேரில் வலியுறுத்தினார். ஆனால் உள்துறை அமைச்சர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், முதல்வரே தர்ணா போராட்டத்தில் இன்று குதிக்கிறார். அவருடன் ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்களும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இதனால் உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள மாவட்டம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி மாநில அரசுக்கும் டெல்லி காவல்துறையினர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.