தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளின் 10வது போட்டியான நேற்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் புனேவில் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிக்கணக்கை தொடங்கியது.
நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர் சேவாக்கின் அதிரடி ஆட்டத்தின் உதவியால் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 165 ரன்கள் குவித்தது. மேலும் சாஹா 39 ரன்களும், பெய்லி 19 ரன்களும் எடுத்தனர்.
வெற்றி பெற 166 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 19.5 ஓவர்களில் ஒரு பந்து மீதமிருக்கையில் 169 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் அகர்வால் 68 ரன்களும், யுவராஜ்சிங் 55 ரன்களும் எடுத்தனர். அகர்வால் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.