பாராளுமன்றம் அருகே தூக்கில் தொங்கிய மர்ம நபர். பெரும் பரபரப்பு
பாராளுமன்ற கட்டிடம் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்ம நபர் ஒருவரின் சடலம் இன்று காணப்பட்டதால் பாராளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் கூறியபோது, “இன்று காலை 7.15 மணியளவில் பாராளுமன்றத்திற்கு மிக அருகே விஜய் சவுக் – ரயில் பவன் இடையே ஊடக வாகனங்களுக்கான பார்க்கிங் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் 39 வயது மர்ம நபர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கைப்பற்றப்பட்டது.
அந்த நபர் எழுதிய தற்கொலை கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதிலிருந்த தகவலின்படி தற்கொலை செய்து கொண்ட நபர் மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தை சேர்ந்த ராம் தயாள் என்பது தெரியவந்துள்ளது.
அவருடைய உறவினர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினர்.
மேலும் இதுகுறித்த நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டு பெரும் தொகையை இழந்துவிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.