பசுக்களை கொல்ல தடையா? டெல்லி ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

.பசுக்களை கொல்ல தடையா? டெல்லி ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
beef
பசுக்களைக்  கொல்லவும், மாட்டிறைச்சி விற்கவும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை நேற்று டெல்லி ஐகோர்ட்  தள்ளுபடி செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுவாமி சத்யானந்தா சக்ரதாரி என்பவர் சமீபத்தில் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “டெல்லிக்கு உட்பட்ட பகுதிகளில் பசுக்களைக்  கொல்லவும், மாட்டிறைச்சி விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றும், வயதான பசுக்கள், எருமைகளைப்  பராமரிக்க தனியாக கோசாலைகளை அமைக்கும்படி டெல்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சஞ்சய் கோஷ்,  “இது விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்றும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றும் வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் ஜி.ரோஹினி, ஜெயந்த்நாத், ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், “இந்த மனு தொடர்பாக  முடிவெடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும் என்றும் இதனால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

Leave a Reply